Posts

Showing posts from March, 2018

சிகரம் வலைப்பூங்கா - 01

Image
வணக்கம் நண்பர்களே! தமிழ் இணைய உலகில் ஆயிரமாயிரம் அருமையான தமிழ்ப் பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் எங்கள் கண்ணில் பட்ட சில நல்ல பதிவுகளை சிகரம் வலைப்பூங்காவில் தொகுத்து வழங்க எண்ணியுள்ளோம். உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். 'சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி' என்னும் மகுட வாசகத்தைத் தாங்கி படைப்புகளை வழங்கி வருகிறது ' ஒரு ஊழியனின் குரல் ' வலைத்தளம். அந்த வலையில் இருந்து இன்று நம் வாசிப்புக்கு தீனி போடப் போவது ' சமரசம் ' சிறுகதை. நம் வாழ்க்கையில் நாம் பல விடயங்களுக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏன் சில நேரங்களில் சமரசங்களால் ஆனதாகவே மாறி விடுகிறது. அப்படி ஒரு நாதஸ்வர கலைஞர் சமரசம் செய்து கொள்ள வேண்டியேற்படும் சூழலை அற்புதமாக தனது கதையில் சொல்லியிருக்கிறார் கதாசிரியர். அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை - சமரசம் . 'எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோர்த்தபடி' பயணித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவு தான் நமது ' முத்த

Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தல்!

Image
Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தலை HMD குளோபல் நிறுவனம் அதிரடியாக இவ்வாரம் வழங்கியிருக்கிறது. கடந்த 2017இல் HMD குளோபல் நிறுவனத்துடன் கைகோர்த்து திறன்பேசிச் சந்தையில் தனது மீள்வருகையைப் பதிவு செய்தது நோக்கியா. 2017 நடுப்பகுதியில் Nokia 5, Nokia 6 மற்றும் Nokia 8 திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.  நோக்கியா திறன்பேசிகள் ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் இயங்குதளத்துடன் விற்பனைக்கு வந்திருந்தன. 2 வருட மேம்படுத்தல் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2017 நவம்பரில் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்திற்கு நோக்கியா 8 (Nokia 8) திறன்பேசி மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து  Nokia 5, Nokia 6 திறன்பேசிகளும் 2018 ஜனவரியில்  ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்கு தளத்திற்கு மேம்படுத்தப்பட்டன.  2018 பிப்ரவரியில்  Nokia 8 திறன்பேசி  ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்திற்கு மேம்படுத்தப்பட்டது. எல்லாவற்றையும் முன்னறிவிப்போடு செய்த நோக்கியா இப்போது அதிரடியாக  Nokia 5, Nokia 6 திறன்பேசிகளுக்கு  ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1   இயங்குதள மேம்பாட்டை வழங்கி அசத்தியிருக்கிறது.  நோக்கியா இயங்குத

கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO

Image
அதிகாரம் 65 சொல்வன்மை  ***** ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு  (குறள் 642) ***** நன்றும் தீதும் நாக்கே செய்யும்! **** பேசவே தெரியு மென்று பெருந்திமிர் கொண்டு நாமும் தேவையே இல்லாப் பேச்சுத் தினம் பேசித் திரிதல் நன்றோ? செல்கின்ற இடத்தி லெல்லாம் அறிமுகம் இல்லாப் போதும் பிறரிடம் வலிந்து சென்று பேசியே கொல்லல் நன்றோ? யாரையோ பற்றி நாமும் ஓரிடம் சொன்ன வார்த்தை தீயினைப் போல் வளர்ந்து தேடியே நமைய ழிக்கும்! பழமதை நறுக்கக் கத்தி பயன்படும் நன்மை செய்யும் கொலைசெய்ய அந்தக் கத்தி முனைந்திடின் குற்றம் தானே? நன்மையும் தீமையாவும் நாக்கினால் வருவ தாலே கவனமாய் இருக்கச் சொல்லி கருத்துநூல் எழுதி வைத்தான்! **** காத்துஓம்பல் - பிழைவராது காத்துக் கொள்ளுதல். சோர்வு - குற்றம். ***** மானம்பாடி புண்ணியமூர்த்தி. 20.02.2018. #084/2018/SigaramCO 2018/03/29 கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO      https://www.sigaram.co/preview.php?n_id=310&code=XKQJNUBq   பதிவர் : மானம்பாடி பு

வாழ்தலின் பொருட்டு - 04

Image
இன்று போலவேதான் அன்றைக்கும்  என்னை முழுதாய் நனைத்தாய்...! உதடுவழி உயிர் நீர் தந்து  உயிர்ப்பித்தாய் என் பெண்மையை! கொஞ்சம் தடுமாறுகையில் கரங்களை வலுவூட்டி தாவி எனை அணைத்தாய்! மலை மீது நின்ற படி உரசிய காற்றையும் உன்னையும் எனக்குள் அனுமதித்தபோது நான் ஈன்றிருந்தேன் உன்னால் கருவுற்று பல கவிக்குழந்தைகளை! திகட்டத் திகட்ட நீ பொழிந்த தேகமுத்தத்தில் முழுதும் நனைந்தபின் குளிரத் தொடங்கியிருந்தது! உருகிக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சட்டென கரம் உதறி விலகிப் போய்விடுவாய்! எனது மொத்தக் காதலையும் தொப்பலாய் நனைத்து பிழிந்தெடுத்தபின்னும் நீ மிச்சம் வைத்துப் போவதுதான் தீரா நோயாகிறது! மறுநாளே காய்ச்சலில் விழும் எனக்கு கடும் எதிர்ப்பு வரும் உன்னை சந்திக்காதேயென...! மாட்டேன் எனச் சொல்வதெல்லாம் நீ மீண்டும் எப்போது வருவாய் என்பதை அறிந்திராததால் தான் ...! நீ வந்தால் போதும் வந்துவிடுவேன் உன்னுள் நனைந்து என்னை உயிர்பித்துக் கொள்ள உயிர் மாமழையே! உடனே வா தேநீரோடு காத்திருக்கிறேன்! முடிந்து போன ஒரு நாள் என்பது எதுவெனச் சொல்ல இயலாது... ஏதோ ஒன்றின் துவக்கமாகலாம், ஏதோ ஒன்றின் மு

காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...

Image
சாத்திரமும் ஆத்திரமும்  காலத்திற்கு தடையில்லை, கோத்திரங்கள் தேவையில்லை  சேத்திரத்தில் லாபமில்லை! காற்றிருந்திடவே தூற்றிடணும்  வாலிபவயதில் உழைச்சிடணும், காலம்நேரம் பார்த்திடாமல்  நாளும்பொழுதும் முயன்றிடணும்! அயரும்நொடியில் ஆயிரமாய்  அதிசயமாகுது பூவுலகம், இமைத்திடும்  நொடியும் இழப்புகள்கோடி கண்டே நகருது இவ்வுலகம்! சமைத்திடக்கூட நேரமின்றி  விரைவுஉணவகம் தேடுகின்றோம், சாத்திரம்பேசும் சிலமனிதர்  பொழுதைவீணே இழக்கின்றார்! படித்திடும்போதும் உழைத்திடணும்  படுக்கையில்தூங்க மறுத்திடணும், நடந்திடும்போதே தூங்கிடணும்  நாளுமுழைத்தே வாழ்ந்திடணும்! பூனை கண்களை மூடிக்கொண்டால்  பூகோளம்இருண்டிட போவதில்லை! காலமும்நேரமும் காத்திருக்க  கடவுளாயினும் பயனில்லை! வேலைநேரம் பார்ப்பார்கள்  வீணாய்பொழுதைக் கழிப்பவர்கள், காலம்நேரம் பார்ப்பதில்லை  கடமையே கண்ணாய் இருப்பவர்கள்! இந்நொடியென்பது உனதாகும்  மறுநொடியாருக்கும் நிலையில்லை, இக்கணமேசெயலை முடித்துவிடு  மறுமுறையென்பதை மறந்துவிடு! காலம்நேரம் யாருக்கும்  காத்திருக்கவும் போவதில்லை, வாழும்நாளை வளமாக்க  உழைத்திடுநாளும் விரைவ

சிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018

Image
வணக்கம் நண்பர்களே! நமது சிகரம் இணையத்தளத்தில் இந்த 2018 ஆம் ஆண்டில் வெளியான பதிவுகளின் மற்றுமோர் தொகுப்பு இது. நீங்கள் வாசிக்கத் தவறிய பதிவுகளை வாசிக்கவும் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை மீண்டும் வாசிக்கவும் இத்தொகுப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். #071 2018.02.18 சிகரம் செய்தி மடல் - 011 - சிகரம் பதிவுகள்          http://whatsup.sigaram.co/2018/02/sigaram-news-letter-011.html             பதிவு : சிகரம் #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS #என்னமச்சிசொல்லுமச்சி    #072  2018.03.04  சிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017    https://www.sigaram.co/preview.php?n_id=298&code=Jh9N2nrx    பதிவு : சிகரம் #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS   # சிகரம்    #073    2018/03/04 கவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்!     https://www.sigaram.co/preview.php?n_id=299&code=uifxqTC3    பதிவர் :  மானம்பாடி புண்ணியமூர்த்தி     #திருக்குறள்