பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன.

பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்துகிறது. நான் சென்னையை விரும்புபவன். சென்னைக்காரன்.' என்று தான் வாழும் சென்னையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தன்னுடைய வசீகரமான எழுத்துக்களால் வாசகர்களைக் கவர்வதில் வல்லவர்.




'எலும்புகளை ஒரு சட்டியில் போட்டு வைத்திருந்தார்கள். அவை சூடாக இருந்தன. எட்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவாக இருந்து, பிறகு பிரேதமாகி, இப்போது ஒரு சிறு மண் சட்டிக்குள் அவர் எலும்புத் துண்டுகளாக இருந்தார். சாம்பல் குவியலில் இருந்து பொறுக்கியெடுத்தவர் கைகள் சுட்டிருக்கும்' என்று கதை ஆரம்பிக்கும் போதே மனதுக்குள் ஒரு சோகம் வந்து உட்கார்ந்து விடுகிறது. தொடர்ந்து கடலில் கரைப்பதற்காக எலும்புகளை பொறுக்கியெடுக்கச் சொல்கிறார் வெட்டியான்.

------------------------------------------------------------

முழுப் பதிவையும் வாசிக்க 'சிகரம்' இணையத்தளத்துக்கு செல்லுமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சிகரம் -  பாரா வின் ஒரே ஒரு அறிவுரை


https://www.sigaram.co/preview.php?n_id=98&code=1eg7caNE

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!