சிகரம் பாரதி 5/50

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

2016.09.27
கூகிளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எது கூகிளின் உண்மையான பிறந்தநாள் என்பதில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. செப்டெம்பர் 5 ஆம் திகதியா அல்லது 27 ஆம் திகதியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. கூகிள் என்ன காரணத்துக்காய் தன் பிறந்தநாளை மாற்றியமைத்தது என்று தெரியவில்லை. ஆனாலும் வாழ்த்துகிறேன். கூகிள் அல்லோ செயலியின் வெற்றிகரமான வெளியீட்டிற்குப் பின் கூகிள் பிறந்தநாள் சிறப்பானதாக உள்ளது. காரணம் கூகிளுக்கு வயது பதினெட்டு. இனி கூகிள் ஒரு இளைஞர். வாக்குரிமை கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. இணையத் தேடலில் ஆரம்பித்து பல்வேறு தளங்களில் கால் பதித்து வெற்றியைக் குவித்து வருகிறது கூகிள். இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்! #HBDGoogle

2016.09.28
ஆட்டாமாவுக்கு அடுத்த பிள்ளை தான் கோதுமை மாவு - காலையிலேயே கேட்ட தத்துவம்!
அம்மா , அப்பாவெல்லாம் யாருன்னு கேட்கப்படாது.

2016.09.29
அவசர சிகிச்சை வண்டி - Ambulance. ஒரு உயிரைக் காப்பாற்றப் போராடும் வாகனம். நாளாந்தம் பல உயிர்களைக் காப்பாற்றும் சேவையை வழங்கி வருகிறது. நெரிசல் மிக்க போக்குவரத்து சாலைகளில் ஆம்புலன்ஸ் வண்டியின் பாடு படு திண்டாட்டம். போக்குவரத்து காவல் துறையினரோ , வண்டியின் முன்னால் நிற்கும் வாகன சாரதிகளோ அல்லது பொது மக்களோ ஆம்புலன்ஸ் க்கு வழியை ஏற்படுத்தித் தர முன் வருவதில்லை. அவரவர் தன் பாட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து காவல் துறையினருக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைத்தால் போதும். ஆனால் அரசியல் வாதிகள் குறித்த வீதியில் வந்தால் அவர்களின் வாகனம் தடையின்றிப் பயணிக்க வழி ஏற்படுத்தித் தருகிறார்கள். ஆம்புலன்ஸ் வண்டிக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.



உயிர் விலை மதிப்பற்றது. இழந்தால் மீண்டும் பெற முடியாது. அரசியல் வாதிகள் அப்படியில்லை. பதவியை இழந்தால் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். இதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். மேலும் மக்களாகிய நாம் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முன்வர வேண்டும். சாலைப் போக்குவரத்தின் போது அவதானமாக இருக்க வேண்டும். நாமும் ஒருநாள் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படலாம். அந்த நேரத்தில் நம் மனநிலை என்னவாக இருக்கும் என சிந்தித்துப் பார்த்து அதன்படி ஏனைய சூழ்நிலைகளில் நாம் நடந்து கொள்ள வேண்டும். ஆகவே , நம் உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை மதிப்போமாக!

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!