வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

வணக்கம் வாசகர்களே!

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

என்ன கேள்வி இது? இது கேள்வியல்ல. நான் அண்மையில் வாசித்து ரசித்த காதல் கவிதைகள் அடங்கிய நூலொன்றின் தலைப்பு. தபூ சங்கர் என்பவர் எழுதி 2008 இல் வெளியான நூல் இது. நூலுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பைத் தவிர உள்ளே அடங்கியிருக்கும் எந்தவொரு கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை. எல்லாக் கவிதைகளுமே உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் போலவே அமைந்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது.

தனது நூலை தபூ சங்கர் இப்படி அறிமுகம் செய்து வைக்கிறார்.

இது வெறும் 
புத்தகமல்ல.
இதைத் 
தொடுபவன் 
காதலனாகிறான் 
தொடுபவள் 
காதலியாகிறாள்.



அறிமுகமே நம்மை ஈர்த்து நூலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது. இந்த வரிகளைத் தவிர தபூ சங்கர் தனியானதொரு முன்னுரையை நூலுக்கு வழங்கவில்லை. ஆயினும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமார்  போன்றோரின் நூல் மதிப்புரைகள் காணப்படுகின்றன.


 

இந்நூலானது இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி காதலன் தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும், இரண்டாம் பகுதி காதலி தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும் அமைந்திருக்கிறது. இது நூலுக்கு மேலும் மெருகூட்டும் ஒரு அம்சமாகக் காணப்படுகிறது. எல்லாக் கவிதைகளுமே ஒரு வித்தியாசமான பாணியில் அமைந்திருக்கின்றன. எளிமையான வரிகள், இனிமையான வரிகள், மனதை மயக்கும் வரிகள் - எல்லாம் சேர்ந்தது தான் இந்த 'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?'.

இனி உங்களுக்காக சில கவிதைகள் இதோ. முதலில் நூல் தலைப்பிற்குரிய கவிதையைப் பார்க்கலாம்.

எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே...
வெட்கத்தைக் கேட்டால் 
என்ன  தருவாய்?

காதலியைப் பார்த்து காதலன் வினவுவதாக அமைந்திருக்கும் இந்தக் கவிதையைப் பார்க்கும் போது புனைவுகளற்ற இந்த வரிகளுக்குள் பல அர்த்தங்கள் ஒளிந்திருப்பதைக் காணலாம். இதைப் போன்றே இன்னும் பல கவிதைகள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் சில வரிசைக்கிரமமாய் இதோ:

காதலியை நோக்கி காதலன்:

1. உன்னை இருட்டில் நிற்க வைத்து 
தீர்த்துக்கொள்ள வேண்டும்....
வெளிச்சம் என்பது 
உன்னிடமிருந்துதான் வீசிக்கொண்டிருக்கிறதா 
என்கிற சந்தேகத்தை.

ஆனால் 
உன்னை அருகில் வைத்துக்கொண்டு 
இருட்டை நான் எங்கு தேடுவேன்?


2. நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது 
நீ தானா?

தொடப்போனால் சிணுங்குவதில்லையே 
நீயா

முத்தம் கேட்டால் வெட்கம் தருவதில்லையே 
நீயா

கவிதை சொன்னால் நெஞ்சில் 
சாய்வதில்லையே 
நீயா

எவ்வளவு அருகிலிருந்தும் அந்த வாசனை 
இல்லையே நீயா 

 வேண்டாம் 
நீயே வைத்துக்கொள்.

புகைப்படத்திலெல்லாம் நீ 
இருக்க முடியாது.

3. உன் மார்புகளுக்கு நடுவே
படுத்துக் கொள்கிற மாதிரி
என்னை எப்படியாவது
சின்னவனாய் ஆக்கிவிடேன்!

 

காதலனை நோக்கி காதலி: 

4. உன்னிடம் 
எந்தக் கெட்ட பழக்கமும்
கிடையாதென்பது 
எனக்கு மகிழ்ச்சிதான் 
எனினும் 
வருத்தமாய் இருக்கிறது 

நான் சொல்லி 
நீ விட 
ஒரு கெட்ட பழக்கம் கூட 
இல்லையே உன்னிடம்.


5. என்ன வேதனை 
என் இரண்டு இதழ்களைக் கொண்டு 
உனக்கு ஒரு 
முத்தம் தானே தர முடிகிறது?

                      இவ்வாறு இன்னும் பல கவிதைகள்   இந்நூலுக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. முக்கியமாக உங்கள் காதலிக்கு பரிசளிக்கவும் காதலர் தின வாழ்த்தட்டையில் எழுத கவிதைகளை சுட்டுக் கொள்வதற்கும் இது மிகவும் ஏற்ற நூல். கவிதைகளுடன் ஆங்காங்கே அழகிய ஒளிப்படங்களும் [Photos ] இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. படிக்கப் படிக்கப் பரவசம் தரும் இந்த நூலை நீங்களும் ஒரு தடவை வாங்கி படித்துத்தான் பாருங்களேன்!

பி.கு:
இது எனது 99 வது பதிவு. அடுத்தது நூறு தான். நூறாவது பதிவு ஒரு விசேடமான பதிவாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். காலத்தின் கட்டாயம் எப்படியோ?

இப்பதிவு தூறல்கள் வலைத்தளத்தில் எழுதுவதற்காக 2011 ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டது. ஆனால் அப்போது வெளியிட முடியவில்லை. இப்போது சிறிதும் மாற்றமின்றி இங்கு வெளியிடப்பட்டுள்ளது. வாசித்து இரசியுங்கள் .

இப்படிக்கு 
என்றும் அன்புடன்,

சிகரம்பாரதி. 

Comments

  1. காதல் கவி மன்னன் ஆயிற்றே தபூ சங்கர். பகிர்வு அருமை.
    100 த் தொடுவதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. பதிவில் உள்ள கவிதைகளும் இனிமை...

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உங்கள் ஆவலை பூர்த்தி செய்யக் காத்திருக்கிறோம்.

      Delete
  3. திரைப்படங்கள் காதலை மட்டுமே பெரும்பாலும் பேசுகின்றன. அதே போல தபூ சங்கர் காதலைப் பற்றி மட்டுமே பேசுகிறார். எனக்கு அதில் உடன்பாடில்லை. காதல் ஈர்ப்பு என்பதால், அதிலேயே தேங்கி கிடைக்கிறார். சமூகத்தில் மற்ற விசயங்கள் குறித்தும் ஒரு கவிஞன் பாடவேண்டும். இல்லையெனில் கவிஞனாய் இருப்பதில் தோல்வியே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மாறுபட்ட - ஆரோக்கியமான கருத்தொன்றை முன்வைத்துள்ளீர்கள். உண்மைதான். சமூகத்தின் சகல தளங்களையும் ஒரு கவிஞன் தொட்டுச் செல்ல வேண்டும். நன்றி.

      Delete
  4. காதல் கவிதைகள்.....

    நல்ல அறிமுகம். அடுத்த பதிவாம் 100-ஆம் பதிவிற்கு இப்போதே வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  5. வாழ்த்துக்கள் பாரதி!!!!மீண்டும் ஒருமுறை இந்நூலை நினைவுபடுத்தியதற்குஃஃஃஇனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்..காதல் பிறந்திருக்கிறது.!!!!!வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!